தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

நாடு முழுவதும் பரவலாக மதுக்கடைகள் திறப்பு: வரிசையில் 'குடி'மக்கள்

கரோனா  நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்ட சிவப்பு மண்டலங்களைத் தவிர்த்து நாடு முழுவதும் பரவலாக இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் குடிமக்கள் காத்துக் கிடக்கின்றனர்

News image
Updated On :4 மே 2020, 7:38 am

கரோனா  நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்ட சிவப்பு மண்டலங்களைத் தவிர்த்து நாடு முழுவதும் பரவலாக இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் குடிமக்கள் காத்துக் கிடக்கின்றனர்.

தில்லி, சட்டீஸ்கர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 40 நாட்களுக்குப் பிறகு இன்று காலை மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், காலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் காட்சியைப் பார்க்க முடிந்தது.

தலைநகர் தில்லியில் தேஷ் பந்து குப்தா சாலையில் மதுக்கடை திறக்கப்பட்டதால், அப்பகுதியே மிகப்பெரிய சந்தை போல கூட்டம் அலைமோதுகிறது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை விட்டும், விடாமலும் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். கரோனாவையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுக்கடைகளின் வாயிலில் குவிந்திருக்கும்  மக்கள் கூட்டம் குறித்தபுகைப்படங்கள் வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Story image

சட்டீஸ்கர் மாநிலத்தில் சிவப்பு மண்டலத்தைத் தவிர பிற பகுதிகளில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் சமூக இடைவெளி எதையும் பின்பற்றாமல் முட்டி மோதியபடி மதுக்கடை வாயிலில் காத்து நிற்கும் மக்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.