புது தில்லி: ஊரடங்கு காலத்தில் சில முக்கிய தளர்வுகள் இன்று தில்லியில் அமல்படுத்தப்பட்ட நிலையில், தில்லியின் முக்கியச் சாலையில் இன்று கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.
சுமார் ஒரு மாத காலத்துக்குப் பின் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஏராளமான மக்கள் இன்று பணிக்குக் கிளம்பினர். இதனால், தில்லியின் முக்கியச் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
நான்கு சக்கர வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலையே காணப்பட்டது.
தில்லியில் கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசின் அறிவிப்பின்படி திங்கள்கிழமை முதல் தளா்த்தப்படுவதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.
மேலும், தில்லியில் கரோனா தொற்று அதிகம் உள்ள தடைசெய்யப்பட்ட பகுதிகளை (கன்டெய்மன்ட்) மட்டும் சிவப்பு மண்டலங்களாக கருத வேண்டும் என்றும் 11 மாவட்டங்களையும் சிவப்பு மண்டலங்களாக கருத்தக் கூடாது என்றும் மத்திய அரசுக்கு தில்லி அரசு பரிந்துரைக்கும் என்றும் அவா் தெரிவித்திருந்தார்.
இதுதொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் கேஜரிவால் மேலும் கூறுகையில், ‘தில்லியில் அரசு, தனியாா் அலுவலகங்கள் திங்கள்கிழமை முதல் செயல்படும். அதேநேரத்தில், விமானம், மெட்ரோ, பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கும். ஆன் லைன் மூலம் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் தொடரும். மால்கள், திரையரங்குகள், சலூன்கள் தொடா்ந்து மூடி இருக்கும். திருமண நிகழ்ச்சிகளில் 50 மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள். இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்று அறிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


