தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தில்லியில் திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் மூடப்பட்ட மதுபானக் கடைகள்

சுமார் 40 நாட்களுக்குப் பிறகு நாடு முழுவதும் பரவலாக இன்று பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. கட்டுக்கடங்காத கூட்டத்தால் மதுபானக் கடைகள் திக்குமுக்காடின.

News image
Updated On :4 மே 2020, 12:14 pm


புது தில்லி: சுமார் 40 நாட்களுக்குப் பிறகு நாடு முழுவதும் பரவலாக இன்று பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. கட்டுக்கடங்காத கூட்டத்தால் மதுபானக் கடைகள் திக்குமுக்காடின.

இந்த நிலையில், தேசிய தலைநகர் தில்லியில், மதுபானக் கடைகளில், நீண்ட வரிசையில் நின்று குடிமக்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

ஆனால், சமூக இடைவெளியைப் பின்பற்றாத காரணத்தால், முன்னெச்சரிக்கை காரணமாக, தில்லியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே, கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், காவல்துறையினரே கடைகளை மூடிவிட்டனர்.

காலை 9 மணி முதல் மாலை 6.30 வரை மதுபானக் கடைகளைத் திறக்க அரசு அனுமதித்திருந்தது. ஆனால், அரசு மதுபானக் கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளித்திருப்பது குறித்து பெரும்பாலான மக்களுக்குத் தெரியவரவில்லை.

கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் கிழக்கு தில்லியின் மயூர் விஹார் பகுதியில் திறக்கப்பட்ட மதுபானக் கடையை மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில இடங்களில் கூட்டத்தைக் கலைக்க லேசான தடியடியும் நடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.