நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

பஞ்சாபில் காரை நிறுத்த முயன்ற காவலரை காரோடு இழுத்துச் சென்ற ஓட்டுநர்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர், அவ்வழியாக வந்த காரை நிறுத்த முயன்ற போது, கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல், காவலரையும் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:34 pm

ANI


ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர், அவ்வழியாக வந்த காரை நிறுத்த முயன்ற போது, கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல், காவலரையும் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரை குறுக்காக மறிப்பது போல காவலர் நின்றிருந்த நேரத்தில், கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல், காரின் முன்பக்கத்தில் காவலர் இடிக்க, காரின் மீது விழுந்த காவலருடன் சில அடி தூரங்கள் காரை ஓட்டிச் சென்றார்.

காவலருடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், கார் பின்னாடியே துரத்திச் சென்று காரை நிறுத்தி, காவலரை மீட்டனர். இந்த சம்பவம் விடியோவாகப் பதிவாகியுள்ளது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலரை, காரைக் கொண்டு இடித்து, இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.