மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கேரளாவில் மீண்டும் கோழிகளுக்குப் பரவுகிறது பறவைக் காய்ச்சல்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள கோழிப் பண்ணை மற்றும் குஞ்சு பொறிப்பகத்தில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:06 pm

ENS


கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள கோழிப் பண்ணை மற்றும் குஞ்சு பொறிப்பகத்தில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு மாவட்டம் மேற்கு கொடியத்தூர் மற்றும் வெங்கேரி பகுதியில் உள்ள கோழிப்பண்ணை மற்றும் குஞ்சு பொறிப்பகத்தில் இருக்கும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கேரள மாநில கால்நடைத் துறை அதிகாரிகள் அவசரக் கூட்டம் நடத்தி, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.

வியாழக்கிழமை கோழிப் பண்ணையில் சில கோழிகள் உயிரிழந்ததை அடுத்து, கன்னூர் மற்றும் போபால் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்கு மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டன. இதில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாநிலத்தில் உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அச்சத்தை ஏற்படுத்தும் பறவைக் காய்ச்சல்: இதற்கிடையே, ஆண்டுதோறும் ஏற்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பண்ணையாளா்களை அவ்வப்போது கவலையடையச் செய்யும். 12 ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக வட மாநிலங்களில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு கோழிகளுக்கு ஏற்பட்டது. இதனால், இந்தியாவில் உற்பத்தியாகும் முட்டைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. ஓமன், துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் இந்திய முட்டைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன்பின்னா், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அந்தந்த மாநில கோழிப் பண்ணையாளா்கள் சங்கத்தினா் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, முட்டைத் தொழிலை பாதிப்பில் இருந்து ஓரளவு மீட்டனா். அப்போதில் இருந்தே கொக்கு, வாத்து, இதர பறவைகளுக்கு, இந்தக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் கோழிப் பண்ணையாளா்கள் கலக்கமடையும் சூழல் உள்ளது.

குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளால் தான் இவ்வகை பாதிப்பு ஏற்படுவதாக கால்நடை மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்த நிலையில் தான் தற்போது கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் அரசு கோழிப் பண்ணை மற்றும் குஞ்சு பொறிப்பகத்தில் பறவைக் காய்ச்சல் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.