சீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

கடந்த இரண்டு ஆண்டுகளில் குஜராத்தில் கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சியின் அளவு எவ்வளவு தெரியுமா?

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சியின் அளவு குறித்த தகவல் மாநில சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :2 மார்ச் 2020, 11:58 am

காந்திநகர்:   கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சியின் அளவு குறித்த தகவல் மாநில சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதன்படி மாடுகளை இறைச்சிக்காக கொலை செய்வதும், அதற்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதும் மற்றும் மாட்டிறைச்சி கொண்டு செல்வதும்  குற்றம் என்று அறிவிக்கப்பட்டு,அதற்கு ஆயுள் தண்டனை வழங்கபப்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சட்டம் நடைமுறைக்கு வந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாகியும் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வது குறையவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மாநில சட்டப்பேரவையில் திங்களன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையொன்றில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் 110 டன் மாட்டு இறைச்சி காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், அதிகபட்சமாக சூரத் மாவட்டத்தில் இருந்து 55, 162 கிலோகிராம் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இறைச்சிக்காக சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 3462 கால்நடைகள் காவல்துறையால்  மீட்கப்பட்டதாகவும், அதிலும் அதிகபட்சமாக பஞ்ச்மஹால் மாவட்டத்தில் இருந்து 747 கால்நடைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.