டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மருத்துவர்கள் தினமான ஜூலை 1 ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவித்தார் மம்தா பானர்ஜி

தேசிய மருத்துவர்கள் தினமான ஜூலை 1 ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

News image
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
Updated On :27 ஜனவரி 2024, 4:52 pm

DIN

தேசிய மருத்துவர்கள் தினமான ஜூலை 1 ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

நாடு முழுவதும் தன்னலம் கருதாது சேவையாற்றி வரும் மருத்துவர்களை கௌரவிக்கும் வகையில் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும். ஆண்ட்ரியா தினம் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், கரோனா முன்களப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஜூலை 1 ஆம் தேதியை  தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேற்குவங்கத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த மருத்துவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான டாக்டர் பிதான் சந்திர ராய், அவரது பிறந்த தினம் மற்றும் நினைவு தினமான ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.