கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

புல்வாமாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: சி.ஆர்.பி.எப் வீரர் வீரமரணம்

தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினரிடையே ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத 2 தீவிரவாதிகள் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

News image
Pulwama encounter
Updated On :27 ஜனவரி 2024, 4:50 pm

UNI

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினரிடையே ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத 2 தீவிரவாதிகள் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்புச் செயல்பாட்டுக் குழு(எஸ்ஓஜி) புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாண்ட்ஸூ கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக அளித்த தகவலின்படி, சி.ஆர்.பி.எப் மற்றும் ராஷ்டிரிய ரைபின்ஸ் (ஆர்ஆர்) ஆகிய குழுக்கள் ஒன்றிணைந்து இன்று அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

மேலும், கிராமத்திலிருந்து வெளியேறும் அனைத்து இடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. 

உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரருக்கு காஷ்மீர்(ஐ.ஜி.பி) விஜய் குமார் அஞ்சலி செலுத்தினார். மேலும், வதந்திகளைத் தடுக்கும்வகையில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(பி.எஸ்.என்.எல்) உள்பட அனைத்து செல்லுலார் நிறுவனங்களின் மொபைல் இணையச் சேவையையும் அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.