மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

புதிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிய கல்விக் கொள்கை 2020-க்கு பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

News image

புதிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Updated On :29 ஜூலை 2020, 7:45 am


புது தில்லி : புதிய கல்விக் கொள்கை 2020-க்கு பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை வெளியிடுவதற்காக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017ல் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 1ல் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வெளியிட்டது. இதில் இந்தி கட்டாயம் என்ற மும்மொழி கொள்கைக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அப்பகுதியை மட்டும் நீக்கி புதிய வரைவு கொள்கையை திருத்தி வெளியிட்டது.

வரைவு கொள்கை குறித்து பொதுமக்கள் ஆலோசனை வழங்க ஆகஸ்ட் 15 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இதில் கல்வியாளர்கள், பொதுமக்கள் என 2 லட்சத்திற்கும் அதிகமான கருத்துகள் கிடைத்ததாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியிருந்தார்.

இந்த கருத்துகளை ஆய்வு செய்ய 15 குழு அமைக்கப்பட்டது. இந்த குழு வரைவு அறிக்கையில் மாற்றம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கியது.

இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை மாற்றவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இனி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர் மாற்றப்பட்டு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் என்று அழைக்கப்பட உள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.