அயோத்தியா: அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் அடித்தளத்தில் ‘காலக் குளிகை’ ஒன்று புதைக்கப்பட உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்த் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தொடர்ந்து கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற உள்ளது
ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச மாநில ஆதித்ய நாத் சமீபத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் அடித்தளத்தில் ‘காலக் குளிகை’ ஒன்று புதைக்கப்பட உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவரான மஹந்த் நிரித்ய கோபால் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது:
ஆமாம்; ராமஜென்ம பூமி குறித்த வரலாறு மற்றும் உண்மைகள் பொறிக்கப்பட்ட காலக் குளிகை ஒன்று அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் அடித்தளத்தில் ஆயிரக்கணக்கான அடிகளின் கீழே வைக்கப்பட உள்ளது என்பது 100 சதவீதம் உண்மைதான். வருங்காலத்தில் எந்த விதமான சச்சரவுகளும் வராமல் தவிர்ப்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது. பிரமாண்டமான் ராமர் கோவில் இங்கு கட்டப்படும்; அதற்கான பூமி பூஜைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. காலக் குளிகை தொடர்பான வேறு எந்த தகவல்களும் எனக்குத் தெரியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காலக் குளிகை தொடர்பான தகவலை, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் ஒரே தலித் உறுப்பினரான காமேஸ்வர் சவுபால் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


