புது தில்லி: பி.எம். கேர்ஸ் நிதியத்திற்கு அளிக்கப்படும் நிதிக்கொடைகளை தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு மாற்றக் கோரிய வழக்குத் தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பொதுநல வழக்கு மையம் என்னும் அரசு சாரா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கில், கரோனா பெருந்தொற்று காலத்தில் பி.எம். கேர்ஸ் நிதியத்திற்கு அளிக்கப்படும் நிதிக்கொடைகளை தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு மாற்றக் கோரியும், அதற்காக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் தேசிய அளவில் செயல்திட்டம் வகுக்கவும் உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கினை நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மனுதாரர் சார்பாக பிரபல வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவும் ஆஜராகினர்.
இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த நிலையில் துஷ்யந்த் தவே தன்னுடைய வாதத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியம் என்பது மத்திய கணக்குத் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படுவது என்றும், ஆனால் பி.எம். கேர்ஸ் நிதி என்பது அவ்வாறு இல்லாமல் தனியார் தணிக்கையாளரால் கையாளப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்,
இதை மறுத்த துஷார் மேத்தா பி.எம். கேர்ஸ் நிதி என்பது பொதுநல அறக்கட்டளை என்றும், அதன் காரணமாகவே வெளியில் இருந்து நிதிகள் பெறப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இருவரையுமே மூன்று பக்க அளவில் எழுத்துப் பூர்வ இறுதிக் கட்ட தொகுப்பு வாதங்களை தாக்கல் செய்யப் பணித்த நீதிபதி அசோக் பூஷன், தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


