கொச்சி: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றம்சாட்டப்பட்டவர்களான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த 5-ஆம் தேதி வந்த பார்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் தொடா்பாக, மாநில அரசின் தகவல்தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவில் மக்கள் தொடா்பு அதிகாரியாக முன்னா் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்பட நான்கு போ் மீது வழக்குப் பதிவு செய்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரது காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, அவர்கள் கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களது நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரித்-ன் நீதிமன்றக் காவலும் ஆகஸ்ட் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


