அசாம் மாநிலம் திப்ருகர் அருகிலுள்ள ரங்மோலா மற்றும் மிரி கிராமங்கள் வெள்ளப்பெருக்கில் மூழ்கிய நிலையில் சுமார் 95 குடும்பங்கள் தற்போது முகாம்களில் வசித்து வருகின்றன.
இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த தாஸ் என்பவர் கூறுகையில், "எனது கிராமம் முகாமில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தற்போது அந்த கிராமம் முழுவதும் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. சுமார் 95 குடும்பங்கள் அங்கு வசித்து வந்தோம். நாங்கள் பேரழிவிற்கு ஆளாகியுள்ளோம், 120 க்கும் மேற்பட்ட வீடுகள் பிரம்மபுத்ரா நதியில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது, நாங்கள் அனைவரும் அரசு ஏற்படுத்தி தந்துள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். நிவாரண முகாம்ங்களை அரசு காலி செய்யும் சூழல் ஏற்படும்போது நாங்கள் எங்கு செல்வோம் என்று தெரியவில்லை” என்று கூறினார்.
அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 26 மாவட்டங்கள் பாதித்துள்ளது. ஜூலை 22 வரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 26,31,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், பார்பேட்டா, திப்ருகார், கோக்ராஜார், பொங்கைகான், டின்சுகியா உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
புதன்கிழமை, முதற்கட்டமாக அசாமுக்கு வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.346 கோடியை விடுவிப்பதாக மத்தியக்குழு அறிவித்துள்ளது, மேலும் மாநிலத்தின் தாழ்வான பகுதிகளில் மீண்டும் மீண்டும் வரும் வெள்ள பிரச்னையை தீர்க்க பூட்டானுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


