சண்டிகர்: கரோனா தொற்றை எதிர்க்கக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மருந்தான கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடைமுறை தொடங்கியிருப்பதாக ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து ஆய்வு செய்யும் பணிகளில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து தற்போது மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது.
இது குறித்து ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கரோனா தொற்றை ஒழிக்கக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோவாக்சின் (Covaxin) மருந்து பரிசோதனையின் உச்சக்கட்டத்தில் உள்ளது. ரோஹ்தக்கில் உள்ள பிஐஜி மையத்தில் கோவாக்சின் மருந்து இன்று மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது. இதற்காக மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்று பேருக்கும் கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்தை அவர்களது உடல் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த மருந்து இதுவரை எந்த விதமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கோவக்சின் மருந்தை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் முயற்சியை பிஜிஐஎம்ஸ் மையம் கடந்த 10 நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக சுமார் 100 பேர் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, இன்று அவர்களுக்கு கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.
இந்தியாவில் முதல்முறையாக கரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை உருவாக்கியது.
தொடர்ந்து, இதனை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஜூன் மாத இறுதியில் ஒப்புதல் தெரிவித்தது.
உலக நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடாகத் திகழும் இந்தியா, இந்த சோதனையிலும் வெற்றி பெறும் பட்சத்தில் கரோனாவை ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதூா் ரயில்வே பாலத்தில் எரியாத மின் விளக்குகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரசுப் பேருந்துகள் இயங்காததால் ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் அவதி

சென்னை: 16 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜையில் வாக்கு எண்ணிக்கை - தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தனி அறை

முதலீட்டு ரீதியான தங்க வா்த்தகம் அதிகரிப்பு! ஆபரணங்களின் விற்பனை சரிவு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


