புதுதில்லி: நாட்டில் ஜூலை 16-ம் தேதி வரை மொத்தம் 1,30,72,718 கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,33,228 கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூலை 16 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் 1,30,72,718க்கும் அதிகமான கரோனா தொற்று சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் அதிகபட்சமாக 34,956 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், 687 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது 3,42,473 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6,35,757 குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 25,602 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில், மொத்தம் 10,03,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெல்லியை சுருட்டிய புவனேஷ்வா், ஹேஸில்வுட்: பெங்களூரு அபார வெற்றி

புதூா் ரயில்வே பாலத்தில் எரியாத மின் விளக்குகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரசுப் பேருந்துகள் இயங்காததால் ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் அவதி

சென்னை: 16 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜையில் வாக்கு எண்ணிக்கை - தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தனி அறை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


