கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஊழியருக்கு கரோனா: ஸ்ரீநகரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் மூடல்

ஸ்ரீநகரில் உள்ள பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(பிஎஸ்என்எல்)இன் முக்கிய கட்டண வசூல் மையத்தில் ஊழியர் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டதால் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. 

News image
BSNL office remain closed after official test positive for COVID-19
Updated On :27 ஜனவரி 2024, 4:56 pm

UNI

ஸ்ரீநகரில் உள்ள பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(பிஎஸ்என்எல்)இன் முக்கிய கட்டண வசூல் மையத்தில் ஊழியர் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டதால் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவிலிருந்து விடுப்பிலிருந்து திரும்பிவந்த பி.எஸ்.என்.எல் அதிகாரி ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அலுவலகத்தில் பணியாற்றும் மற்ற ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவு வரும் வரை வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.