கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கரோனா: புதுவையில் 1500-ஐ நெருங்கும் பாதிப்பு

புதுவையில் கடந்த 24 மணி நேரத்திலிருந்து 50 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
corona testing in puducherry
Updated On :27 ஜனவரி 2024, 4:56 pm

UNI

புதுவையில் புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,468 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறியதாவது:

புதுவையில் திங்கள்கிழமை 384 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 49 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,468 ஆக உயர்ந்துள்ளது.

இதில் தற்போது கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 387 பேரும், ஜிப்மரில் 123 பேரும், கோவைட் கேர் சென்டரில் 76 பேரும், காரைக்காலில் 53 பேரும், ஏனாமில் 25 பேரும், மாஹேவில் ஒருவரும் என 665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.