லக்னௌ: எதிர்வரும் பக்ரீத் பண்டிகை தினத்தன்று ஆடு வெட்ட அனுமதி கேட்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு, இஸ்லாமிய அறிஞர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சன்னி இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்த மூத்த அறிஞர் மற்றும் ஐஷ்பாக் வழிபாட்டுத் தலத்தின் மூத்த இமாம் மவுலானா காலித் ரஷித் பிராங்கி மஹலி. இவர் எதிர்வரும் பக்ரீத் பண்டிகை தினத்தன்று ஆடு வெட்ட அனுமதி கேட்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு, கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
உயிர்த் தியாகம் என்பது பக்ரீத் பண்டிகையின் முக்கியமான அம்சமாகும், எனவே அதனைச் செயல்படுத்துவதற்கு ஆடுகளை பலிகொடுக்க ஏதுவாக, மாநிலம் முழுவதும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடங்களில் ஆட்டு இறைச்சிக் கூடங்களை / சந்தைகளைத் திறக்க மாநில அரசு அனுமதிக்க வேண்டும்.
அந்த இடங்களில் எல்லாம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துதல், அங்கு வருவோருக்கு கைச்சுத்தத் திரவம் மற்றும் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்தல் உள்ளிட்ட நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்படும்.
பக்ரீத் பண்டிகையை மனதினில் கொண்டு அரசு அனுமதியுடனான இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்புவதற்காகவே ஆண்டுமுழுவதும் கால்நடைகளை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
அதேசமயம் இத்தகைய வியாபாரிகள் மாநிலம் முழுவதும் தங்களது கால்நடைகளை தங்கு தடையின்றி கொண்டு செல்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
இறுதியாக கரோனா நோய்ப் பாதிப்பு வீதத்தினைக் கட்டுப்படுத்த இயலும் என்றால், ஒவ்வொரு மசூதியிலும் அதன் கொள்ளளவில் பாதியளவிற்கு நபர்களுடன் பக்ரீத் தொழுகை நடப்பதற்கும் அனுமதியளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!

எதிரணியின் பாராட்டைப் பெற்ற பார்சிலோனா வீரர்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


