புது தில்லி: இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சீன செயலியான டிக் டாக்கின் இடத்தைப் பிடிக்க, இன்ஸ்டாக்ராமின் ‘ரீல்ஸ்’ தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சீன விடியோ செயலியான டிக் டாக் சமீபத்தில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளில் ஒன்றாகும். இதற்கு சரியான ஒரு மாற்றினை இந்திய ரசிகர்கள் தற்போது ஆர்வமாகத் தேடி வருகின்றனர்.
தற்போது பேஸ்புக்கால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாக்ராம் செயலியானது கடந்த வருடம் ‘ரீல்ஸ்’ என்னும் வசதியை அறிமுகம் செய்தது. டிக்டாக்கில் உள்ளது போன்றே இதிலும் பயனாளர்கள் 15 நொடி விடியோ ஒன்றை, தகுந்த பின்னணி இசை போன்றவற்றுடன் உருவாக்கி பகிரலாம். சோதனை அடிப்படையில் முதலில் பிரேசிலில் அறிமுகமான இந்த வசதியை பின்னர் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இன்ஸ்டாக்ராம் விரிவுபடுத்தியது.
இந்நிலையில் இந்தியாவில் டிக் டாக்கின் இடத்தைப் பிடிக்க, இன்ஸ்டாக்ராமின் ‘ரீல்ஸ்’ தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பேஸ்புக் செய்தித்தொடர்பாளர் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ‘மேம்படுத்தப்பட்ட ரீல்ஸ் வசதியினை இன்னும் சில நாடுகளில் அறிமுகம் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளோம். ரீல்ஸ் பயனாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும், தங்களது திறமையினை வெளிப்படுத்த வாய்ப்பு தருவதாகவும் அமையும். எப்போது இது அறிமுகம் செய்யப்படுகிறது மற்றும் எந்த நாடுகளில் எல்லாம் என்பது குறித்து தற்சமயம் திட்டமிடப்படவில்லை’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!

எதிரணியின் பாராட்டைப் பெற்ற பார்சிலோனா வீரர்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


