திருவனந்தபுரம் : திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்திற்கு வந்த கடத்தல் தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது கேரளத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுர விமான நிலைய சுங்க அதிகாரிகள் சமீபத்தில் அங்குள்ள சரக்கு முனையத்தில் இருந்து கடத்தல் தங்கத்தினைக் கைப்பற்றியுள்ளனர். அவர்களுக்கு கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் சிக்கிய தங்கத்தின் மதிப்பு சுமார் 30 கிலோ என்று தெரிவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னதாக சரக்கு விமானம் ஒன்றின் மூலமாக அந்தப் பெட்டகமானது திருவனந்தபுர விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளது. அதிகாரிகளால் விடுவிக்கப்படுவதற்காக சரக்கு முனையத்தில் காத்திருப்பில் இருந்துள்ளது.
விசாரணையில் அந்தப் பெட்டகமானது துபாயில் இருந்து வந்துள்ளது என்பதும், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்திற்கு அனுப்பட்டுள்ளது என்பதும் சுங்க அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து விரிவாக கருத்துத் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து வரும் வேளையில், அதை அனுப்பியவர் யார் என்பது குறித்து விசாரணை தொடர்வதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!

எதிரணியின் பாராட்டைப் பெற்ற பார்சிலோனா வீரர்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


