ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தில்லியில் கரோனா தொற்றின் தாக்கம் குறையத் துவங்கியுள்ளது: கேஜரிவால்

தில்லியில் கரோனா தொற்றின் தாக்கம் குறையத் துவங்கியுள்ளது என்று முதல்வர் கேஜரிவால் வெள்ளியன்று தெரிவித்துள்ளார்

News image

தில்லியில் கரோனா தொற்றின் தாக்கம் குறையத் துவங்கியுள்ளது என்று முதல்வர் கேஜரிவால் வெள்ளியன்று தெரிவித்துள்ளார்.

Updated On :3 ஜூலை 2020, 3:25 pm

புது தில்லி: தில்லியில் கரோனா தொற்றின் தாக்கம் குறையத் துவங்கியுள்ளது என்று முதல்வர் கேஜரிவால் வெள்ளியன்று தெரிவித்துள்ளார்.

தில்லி எல்.என்.ஜெ.பி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர் அசீம் குப்தா சமீபத்தில் கரோனாவிற்கு பலியானார். வெள்ளியன்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்த முதல்வர் கேஜரிவால் ரூ ஒரு கோடி நிதி வழங்கினார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

தில்லியில் கரோனா தொற்றின் தாக்கம் குறையத் துவங்கியுள்ளது. அதற்காக நாம் நிலைமையைக் கண்காணிக்க எதுவும் செய்ய வேண்டியது இல்லை என்று அர்த்தமாகாது. எல்லா சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். தொற்று குறையும் இந்த சூழ்நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் இதற்கு தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் நகரம் செயல்பாடுகளுக்காக திறந்து விடப்பட்ட போது, 60,000 வரை நோயதொற்றுக்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது தில்லியில் 25, 000 நடைமுறை நோயாளிகள் மட்டுமே உள்ளார்கள். இந்த நிலையானது தில்லியின் இரண்டு கோடி மக்கள், அரசு மற்றும் சமுதாயம் ஆகியோரின் கூட்டு முயற்சியினால் சாத்தியமானது.

இவ்வாறு அவர் தெரவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.