கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

காவலருக்கு கரோனா: கர்நாடக காவல் நிலையம் மூடல்

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம் அருகே உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் காவல் நிலையத்துக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

News image
K'taka's police station sealed
Updated On :27 ஜனவரி 2024, 4:52 pm

UNI

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம் அருகே உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் காவல் நிலையத்துக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

மைசூரு மாவட்டத்தில் எச்.டி கோட்டில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதையடுத்து அவருடன் பணியாற்றி அனைத்து  காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட காவலரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கரோனா பாதித்த காவல் நிலையத்தில் உள்ளேயும், வெளியையும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டனர். மேலும், காவல்நிலையத்துக்கு தற்காலிகமாகச் சீல் வைக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.