ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஆந்திரம்: பிணவறையில் மனிதக் கண்களைத் தின்று தீர்த்த எலிகள்

ஆந்திர மாநிலம் எலுரு அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மனித உடலில் இருந்த கண்களை எலிகள் தின்ற கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2020, 7:49 am


எலுரு: ஆந்திர மாநிலம் எலுரு அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மனித உடலில் இருந்த கண்களை எலிகள் தின்ற கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

துரதிருஷ்டவசமாக இந்த சம்பவம் நடந்த பகுதி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கிருஷ்ண ஸ்ரீனிவாஸின் தொகுதிக்குட்பட்டதாக உள்ளது.

எலுரு மாவட்டத்தைச் சேர்ந்த வைகுந்த வாசு செவ்வாய்க்கிழமை டிராக்டர் மோதி பலியானார். இவரது உடல் எலுரு அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

புதன்கிழமை காலை அவரது உடலை வாங்க வந்த உறவினர்கள், வைகுந்த வாசுவின் கண்கள் மற்றும் கண் இமைகளை எலிகள் கடித்துத் தின்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை சமாதானம் செய்த ஊழியர்கள் உடலை கொடுத்து அனுப்பினர்.

இதேப் போன்ற சம்பவம் கடந்த வாரமும் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் பிரேத பரிசோதனைக்கு வந்த செட்டி ஸ்ரீராம மூர்த்தியின் கண்களையும் எலிகள் கடித்துத் தின்ற கொடூரம் நடந்துள்ளது.

இது பற்றி ஊழியர்களிடம் கேட்டால், ஃப்ரீஸர்கள் வேலை செய்யாததால்தான் இந்த நிலை ஏற்படுவதாகவும், 6 ஃப்ரீஸர்களில் ஒன்று மட்டுமே வேலை செய்வதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், பிணவறை முழுக்க குப்பை மேடாக இருப்பதாகவும் சுத்தமாக வைத்திருக்காததே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.