ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தவறான திசையில் வந்தால் டயர் பங்சர்: புவனேசுவரத்தில் புது தொழில்நுட்பம் அறிமுகம்

தவறான திசையில் வாகனத்தை ஓட்டி வந்தால் டயரை பங்சராக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது என்று புவனேசுவர காவல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2020, 12:41 pm


புவனேஸ்வரம்: தவறான திசையில் வாகனத்தை ஓட்டி வந்தால் டயரை பங்சராக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது என்று புவனேசுவரம்  காவல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

முதல் முறையாக இந்த தொழில்நுட்பம் புவனேசுவரத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின்படி, சாலைகளில் வேகத் தடுப்பு போன்று ஸ்பைக் பேரியர்கள் பொருத்தப்படும். இது எதிர்  அல்லது தவறான திசையில் வரும் வாகனங்களின் டயர்களை கிழித்து பங்சராக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியாக எஸ்பிளனேட் ஒன் மால் பகுதியில் இந்த டயர் கில்லர்கள் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் பற்றி விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு, பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது.

தவறான திசையில் வாகனம் இயக்கப்படுவதால் நெரிசல் ஏற்படும் இடங்களாக நகரில் 242 இடங்கள்  கண்டறியப்பட்டுள்ளன. இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்தால், 242 இடங்களிலும் இந்த டயர் கில்லர்களைப் பொருத்தலாம் என்று போக்குவரத்துக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.