ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கரோனா வைரஸ்: விமானத்தில் தனியாளாக பயணித்து சென்னை வந்த பெண்

கரோனா வைரஸ் பாதித்த சீனாவில் இருந்து சிங்கப்பூர் வந்து அங்கிருந்து சென்னை திரும்பியிருக்கிறார் மருத்துவக் கல்லூரி மாணவி வேலம்.

News image
Updated On :1 பிப்ரவரி 2020, 11:18 am


சென்னை: கரோனா வைரஸ் பாதித்த சீனாவில் இருந்து சிங்கப்பூர் வந்து அங்கிருந்து சென்னை திரும்பியிருக்கிறார் மருத்துவக் கல்லூரி மாணவி வேலம்.

சீனாவில் மட்டுமல்லாமல், உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறது கரோனா வைரஸ்.  ஒரு வேளை யாராவது தொடர்ந்து தும்மினால் கூட அவர்களுக்கு கரோனா பாதிப்பு இருக்கக் கூடுமோ என்று அச்சப்படும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் சீனாவின் தியான்ஜின் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மாணவியான வேலம் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை திரும்பியுள்ளார்.

வூஹான் நகரில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தியான்ஜின். அங்கிருந்து சென்னை திரும்பிய வேலம் நமது எக்ஸ்பிரஸ் நிரூபரிடம் பேசுகையில், கரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக சாலைகளில் கூட ஒரு சிலர்தான் நடமாடினார்கள். 

சில கடைகள் மட்டுமே திறந்திருக்கின்றன. அந்த கடைகளிலும், மாஸ்க் அணிந்து கொண்டு உள்ளே வரவும் என்று எழுதப்பட்டிருக்கும். நாங்கள் தங்கியிருந்த விடுதி நிர்வாகம் தினமும் எங்களது உடல்வெப்ப நிலைய பரிசோதித்து தினமும் ஒரு மாஸ்க் கொடுக்கும்.

தற்போது விடுதியில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களும் சென்றுவிட்டனர். ஆப்ரிக்கா, நேபாளம் மற்றும் இரண்டு இந்திய மாணவர்களைத் தவிர என்று கூறியுள்ளார்.

வேலம் தியான்ஜின் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் தனி ஒரு பயணியாக வந்துள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமானத்தில் யாருமே இல்லை. ஆனால் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானம் முழுக்க ஆட்கள் நிரம்பி வழிந்தனர் என்கிறார் வேலம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலம் சீனா, சிங்கப்பூர், சென்னை விமான நிலையங்களில் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், சென்னை வந்தடைந்ததில் மகிழ்ச்சி என்றும் கூறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.