நாட்டில் புதிதாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,337 ஆக உள்ள நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு 1,00,55,560 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 24,337 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,00,55,560-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு மேலும் 333 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,45,810-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 96,06,111-ஆக அதிகரித்தது. இது ஒட்டு மொத்த பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கை 95.53 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் இப்போது 3,03,639 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 20 லட்சம் போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனா். அவா்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் அதிகரித்தது. அதன்பிறகு, ஒரு கோடியைத் தொடுவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


