மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

எந்த அச்சுறுத்தலையும் பொறுத்துக் கொள்ள முடியாது: ராஜ்நாத் சிங்

இந்திய - சீன எல்லைப் பகுதியில் சீனப் படைகளின் அத்துமீறல்களின்போது நமது படை எப்போதும் பலம் குறைந்தது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தக்க பதிலடி கொடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சி

News image

எந்த அச்சுறுத்தலையும் பொறுத்துக் கொள்ள முடியாது: ராஜ்நாத் சிங்

Updated On :19 டிசம்பர் 2020, 8:56 am


ஹைதராபாத்: இந்திய - சீன எல்லைப் பகுதியில் சீனப் படைகளின் அத்துமீறல்களின்போது நமது படை எப்போதும் பலம் குறைந்தது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தக்க பதிலடி கொடுத்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது, ஆனால், எந்த விதமான அச்சுறுத்தல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக தெலங்கானா மாநிலத்திற்கு வெள்ளிக்கிழமை சென்றார்.

தெலங்கானாவின் துண்டிகலில் உள்ள இந்திய விமானப் படை அகாடமியின் தளத்தில் நடைபெற்ற கூட்டு அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார்.

சீனாவின் நோக்கம் என்ன என்பது, இந்த கரோனா பேரிடர் காலத்தில் நன்கு வெளிப்பட்டதாகவும், ஆனால் நாம் பலவீனமானவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருப்பதாகவும், எல்லையில் நடைபெறும் எந்த விதமான அத்துமீறல்களுக்கும் இந்த புதிய இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.