பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

வாட்ஸ்அப் மூலம் கணினியிலும் விடியோ, ஆடியோ அழைப்பு மேற்கொள்ளும் வசதி

செல்லிடப்பேசி செயலியான வாட்ஸ்அப்பை, வாட்ஸ்அப் வெப் மூலம்  கணினியில் பயன்படுத்தும் பயனாளர்கள், இனி அதிலேயே விடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

News image

வாட்ஸ்அப் மூலம் கணினியிலும் விடியோ, ஆடியோ அழைப்பு மேற்கொள்ளும் வசதி

Updated On :18 டிசம்பர் 2020, 9:29 am


புது தில்லி: செல்லிடப்பேசி செயலியான வாட்ஸ்அப்பை, வாட்ஸ்அப் வெப் மூலம்  கணினியில் பயன்படுத்தும் பயனாளர்கள், இனி அதிலேயே விடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

செல்லிடப்பேசியில் விரைவாக செய்திகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் வாட்ஸ்அப் தற்போது வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலியை உருவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த புதிய வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலியில், விடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்வதற்கான பொத்தான்கள் இடம்பெற்றிருக்கும்.

தற்போது இது சோதனை முயற்சியிலேயே இருப்பதாகவும், சில பயனாளர்களுக்கு மட்டும் இதனை அறிமுகப்படுத்தி பயன்படுத்த வாய்ப்பளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும், இந்த டெஸ்க்டாப் செயலியைப் பயன்படுத்தவும், செல்லிடப்பேசி அவசியமாக இருக்கும், ஆனால், ஆடியோ, விடியோ அழைப்புகள் கணினி மூலமே மேற்கொள்ளப்படும்.

அதுமட்டுமல்லாமல், வாட்ஸ்அப் பயனாளர், ஒரு விடியோவை தனது நண்பர்கள், உறவினர்கள் அல்லது ஸ்டேட்டஸில் வைக்கும் முன்பு, அதன் ஆடியோவை மியூட் செய்யும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டு வருகிறது.

அதுவும் பீட்டா முறையில் சோதனையில் உள்ளது.  அதாவது ஒரு விடியோவை வாட்ஸ்அப்பில் பதிவேற்றம் செய்யும் போது, தற்போது டிரிம்மர் வாய்ப்பு வருவது போல, மியூட் ஆப்ஷனும் இணைய உள்ளது. தற்போது ஒரு விடியோவை எடுத்தால், அதனை பதிவு செய்யும் போது அதனுடன் பதிவான ஆடியோவையும் சேர்த்துத்தான் வாட்ஸ்அப்பில் பதிவேற்ற முடியும். 

இதுமட்டுமல்லாமல் பல புதிய வசதிகளையும் வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.