சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தென்கொரியாவில் 10 அமெரிக்க வீரர்களுக்கு கரோனா 

தென்கொரியாவில் பணியாற்றும் 10 அமெரிக்க வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. 

News image
10 US soldiers in S.Korea test Covid-19 positive
Updated On :27 ஜனவரி 2024, 6:05 pm

IANS

தென்கொரியாவில் பணியாற்றும் 10 அமெரிக்க வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த நவ.26 முதல் டிச.8 வரை 10 அமெரிக்க வீரர்கள் வந்துள்ளதாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த டிச.6 மற்றும் 7 தேதிகளில் நான்கு பேர் ஒசன் விமானத் தளத்திற்கு வந்தனர். ஒசான் விமானத் தளம் சியோலுக்கு தெற்கே 70 கி.மீ தொலைவில் உள்ள பியோங்டேக்கில் அமைந்துள்ளது.

இதற்கிடையில், மற்ற ஆறு வீரர்கள் நவம்பர் 26, 29, டிசம்பர் 6, 7, மற்றும் 8 ஆகிய தேதிகளில் சர்வதேச வர்த்தக விமானங்களில் சியோலுக்கு மேற்கே உள்ள இஞ்சியோன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர்.

கரோனா உறுதிப்படுத்தப்பட்ட 10 பேரும் அமெரிக்க இராணுவ கேரிசன் ஹம்ப்ரிஸ் மற்றும் ஓசன் விமானத் தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 689 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் இதுவரை 40,786 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது 

கடந்த 34 நாள்களில் தினசரி பாதிப்பு 600-க்கு மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.