பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பஞ்சாப் மாநிலத்தில் 23 எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா தொற்று

பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சர்கள் உள்பட 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

News image
Updated On :27 ஆகஸ்ட் 2020, 9:39 am

பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சர்கள் உள்பட 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இன்னும் இரண்டு நாள்களில் சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் செதரிவித்துள்ளார். 

மாநில சட்டமன்றத்தில் 117 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில், சட்டபேரவைக்குள் நுழைவதற்கு கரோனா எதிர்மறை அறிக்கையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சபாநாயகர் ராணா கே.பி.சிங் தெரிவித்தார். 

இந்நிலையில், கரோனா சோதனை செய்ததில் இதுவரை 23 எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று  இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 14 பேர் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆறு பேர் ஷிரோமணி அகலி தளத்தைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களாவர். 

ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினரான திரிப்ட் ராஜீந்தர் சிங் பாஜ்வா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. ஆனால், தற்போது அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.