இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கேரளம்: கரோனாவில் இருந்து தப்பிக்க குடை பிடித்துச் செல்லும் கிராமம்

கரோனாவில் இருந்து தப்பிக்க ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், கேரளத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் புதிய யுக்தியைக் கண்டறிந்துள்ளனர்.

News image
வண்ணக் குடைகள்
Updated On :27 ஜனவரி 2024, 4:32 pm

IANS


திருவனந்தபுரம்: கரோனாவில் இருந்து தப்பிக்க ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், கேரளத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் புதிய யுக்தியைக் கண்டறிந்துள்ளனர்.

ஒரு மீட்டர் இடைவெளையை பின்பற்ற வசதியாக வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, அனைவரும் குடைபிடித்துச் செல்கிறார்கள். இதன் மூலம் ஒரு மீட்டர் இடைவெளியை மிகச் சரியாகப் பின்பற்ற முடியும் என்பதே அந்த திட்டம்.

கேரள மாநில நிதித் துறை அமைச்சர் தாமஸ் ஈஸாக் கொண்டு வந்த இந்த திட்டம் இப்போது வைரலாகி வருகிறது. பொருளாதார நிபுணராக இருந்து அமைச்சராக மாறிய தாமஸ் ஈஸாக், தனது இந்த யோசனையை தண்ணீர்முக்கம் கிராம நிர்வாகத்திடம் சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து, அந்த திட்டத்தை கிராம மக்கள் தீவிரமாக அமல்படுத்தத் தயாராகிவிட்டனர். இது பற்றி கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள். அதன்படி, வீட்டை விட்டு வெளியே வரும் எவராக இருந்தாலும் கையில் குடைபிடித்துச் செல்கிறார்கள் கரோனாவில் இருந்து தப்பிக்க.

ஒரு மீட்டர் இடைவெளியைப் பின்பற்ற குடைபிடித்துச் செல்வது என்பது நல்ல யோசனை என்பதோடு, கோடை வெயிலோடு, கரோனாவில் இருந்தும் தப்பிக்க உதவுகிறது என்கிறார்கள் கிராம மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.