அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள்: தில்லி முதல்வர் கேஜரிவால்

கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நான்கு பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை முறையில் நடத்தப்பட்டது, முடிவு

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 7:17 am

புது தில்லி: கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நான்கு பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை முறையில் நடத்தப்பட்டது, முடிவு திருப்திகரகமாக இருந்ததாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று 12 மணியளவில் காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தில்லியில் பரிட்சார்த்த முறையில் நான்கு நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. முடிவு திருப்திகரமாக உள்ளது. முதற்கட்ட சோதனையில் பிளாஸ்மா சிகிச்சை நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாள்களுக்கு மேலும் சில பரிசோதனைகள் நடத்தப்படும்.

பரிசோதனைகள் மூலம் சிகிச்சை பலனளிப்பது உறுதி செய்யப்பட்டதும், மத்திய அரசிடம், பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வதற்கு அனுமதி பெறப்படும்.

எனவே, கரோனா தொற்று பாதித்து சிகிச்சையின் பலனாகக் குணமடைந்தவர்கள் அனைவரும் தாமாக முன் வந்து பிளாஸ்மாவை தானமாக அளிக்க முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.