கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நான்கு மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 17 முதல் 21 வரை மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு மாத பெண் குழந்தை சிகிச்சை பெற்று வந்தது. பின்னர், செவ்வாய்க்கிழமை அதிகாலை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது குழந்தைக்குச் சுவாச கோளாறு மற்றும் பிற பிரச்னைகள் ஏற்பட்டன.
குழந்தைக்கு கரோனா பரிசோதனை செய்கையில் புதன்கிழமையன்று கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. குழந்தையின் தொலை தூரத்தில் உள்ள உறவினருக்கு கரோனா பாதிப்பு இருந்துள்ளது. ஆனால், குழந்தையின் குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் இல்லை என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.
குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து வென்டிலேட்டர் மூலம் சுவாசித்து வந்தது. மேலும், குழந்தைக்கு ஏற்கெனவே ஒருசில பிரச்னை இருந்ததாகவும் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் இதை உறுதிப்படுத்தினார். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இன்று உயிரிழந்தது என்று அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் அந்த மாநிலத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


