அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

டெலிவரி பையன்களை போல் வேடமிட்டு இரு தலை பாம்பை விற்க முயன்றவர்கள் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டெலிவரி பையன்களை போல் வேடமிட்டு இரு தலை பாம்பை விற்க முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image

இருதலைப் பாம்பு

Updated On :23 ஏப்ரல் 2020, 11:00 am

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டெலிவரி பையன்களை போல் வேடமிட்டு இரு தலை பாம்பை விற்க முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூரிவில் கரோனா ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுதேடிச் சென்று வழங்கும் பணியினை ‘டன்சோ’ என்னும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக அதன் ஊழியர்கள் இரு சக்கர வாகனங்களில் நகரம் முழவதும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவில் ‘டன்சோ’ டெலிவரி பையன்களை போல் வேடமிட்டு இரு தலை பாம்பை விற்க முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அம்மாநில மத்திய குற்றப் பிரிவு காவல்துறை இணை ஆணையர் சந்தீப் பாட்டில் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ ‘டன்சோ’ டெலிவரி பையன்களை போல் வேடமிட்டு இரு தலை பாம்பை விற்க முயன்ற இருவரை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்’ என்று தெரிவித்திருந்தார். அத்துடன் இந்தப் பாம்புகள் 1972-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வன உயிரின பாதுகாப்புச் சட்டப் பிரிவு 4-இன் படி பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் என்றும் பதிவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக செய்தயாளர்களிடம் பேசிய குற்றப் பிரிவு காவல்துறை உதவி ஆணையர் குல்தீப் ஜெயின் கூறியதாவது:

முஹமது ரிஸ்வான் மற்றும் அசார் கான் ஆகிய இரு இளைஞர்களும் அந்த பாம்புகளை ரூ.50 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார்கள். இந்த வகைப் பாம்புகள் மருத்துவ குணம்       கொண்டவை என்பதோடு, அதை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டம் வரும் என்றும் நம்பப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.