புது தில்லி: கரோனா தொற்றுக்கு எதிரான போரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகச் சரியாகக் கையாண்டு வெற்றி பெறும் என்று இந்திய மக்கள் 93.5% பேர் நம்புவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அது தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐஏஎன்எஸ்-சி நடத்திய ஆய்வில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, கரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய மக்களில் 76.8% பேர் மட்டுமே மத்திய அரசை நம்பியதாவும், ஆனால், இதே நம்பிக்கை ஏப்ரல் 21ம் தேதி வாக்கில் 93.5 % ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில், இந்திய அரசு, கரோனா தொற்றுக்கு எதிரான சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவே தான் கருதுவதாக ஏராளமானோர் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 16 முதல் 21ம் தேதி வரை தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 16ம் தேதி 75.8% பேர் மட்டுமே மத்திய அரசை நம்புவதாகக் கூறியிருந்த நிலையில், இது ஏப்ரல் 21ம் தேதி 93.5% ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


