பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

பஞ்சாப்பில் அபாயப் பகுதியாக இருந்த மாவட்டம் கரோனா இல்லாத இடமானது

பஞ்சாப் மாநிலம் எஸ்பிஎஸ் நகர் மாவட்டத்தில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 16 வயது சிறுமி, குணமடைந்து இன்று வீடு திரும்பினார். இதன் மூலம், எஸ்பிஎஸ் நகர் மாவட்டம் கரோனா நோயாளி இல்லாத மாவட்டமாக மாற

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:30 pm

IANS

பஞ்சாப் மாநிலம் எஸ்பிஎஸ் நகர் மாவட்டத்தில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 16 வயது சிறுமி, குணமடைந்து இன்று வீடு திரும்பினார். இதன் மூலம், எஸ்பிஎஸ் நகர் மாவட்டம் கரோனா நோயாளி இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் எஸ்பிஎஸ் நகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அந்த மாநிலத்தில் கரோனா பாதித்து முதல் பலி இந்த மாவட்டத்தில்தான் நிகழ்ந்தது.

இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் கரோனா அபாயப் பகுதியாக எஸ்பிஎஸ் நகர் மாவட்டம் மாறியது.

தொடர்ந்து கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 18 பேர் குணமடைந்து வீடு திரும்பி வந்த நிலையில், இன்று கடைசி நோயாளியான 16 வயது சிறுமியும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது அந்த மாவட்டத்தில் ஒரு கரோனா நோயாளியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.