ஸ்ரீநகர்: கரோனா தொற்றுடன் போராளிகளை ஜம்மு காஷ்மீருக்குள் அனுப்பும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கண்டேர்பால் மாவட்டம் மணிகாம் பகுதியில் உள்ள காவல்துறை பயிற்சி பள்ளியின் உள்பகுதியில், மாநில காவல்துறை சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் கரோனா தனிமைப்படுத்துதல் முகாம்களை அவர் புதனன்று பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் குறித்து விசாரித்து அறிந்ததுடன், அந்தப் பகுதியின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் கூறியதாவது:
இதற்கு முன்னர் வரை ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகளைத் தாங்கிய போராளிகளை பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஊடுருவச் செய்து கொண்டிருந்தது. தற்போது கரோனா தொற்றுடன் போராளிகளை ஜம்மு காஷ்மீருக்குள் அனுப்பும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
அவர்கள் மறைந்திருந்து தங்களது செயல்பாடுகள் மூலம் கரோனா வைரஸ் தொற்றைப் பரப்ப முடியும் என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


