அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கர்நாடகத்தில் வியாழக்கிழமை முதல் ஊரடங்கு தளர்வு

அபாயப் பகுதி மற்றும் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் வியாழக்கிழமை முதல் ஊரடங்கை சற்று தளர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2020, 12:37 pm

பெங்களூரு: அபாயப் பகுதி மற்றும் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் வியாழக்கிழமை முதல் ஊரடங்கை சற்று தளர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் 14ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 23ம் தேதி முதல் சில குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று மாநில முதன்மைச் செயலாளர் டி.எம். விஜய பாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதி, விவசாயப் பணிகளை மேற்கொள்ளலாம், அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம், சிமெண்ட், இரும்பு, டைல்ஸ், செங்கல் உற்பத்திக்கும், சாலையோர உணவகங்களை இயக்கவும் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கட்டுமானப் பணிகளும், சாலைகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி மையங்கள் மே 3ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.