தட்டுப்பாட்டால் வந்த யோசனை : ஒரே வென்டிலேட்டரில் பலருக்கு சிகிச்சை
கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு மிக முக்கியத் தேவை வென்டிலேட்டர்.


புது தில்லி: கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு மிக முக்கியத் தேவை வென்டிலேட்டர். ஆனால், பொதுவாகவே அரசு மற்றும் பெரிய தனியார் மருத்துவமனைகளில் கூட தற்போதிருக்கும் வென்டிலேட்டர் வசதி என்பது மிகவும் குறைவானதே.
இதனால் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகப்பெரிய சவாலாக இருப்பது வென்டிலேட்டர். ஆனால், ஒரு சவாலில் தான் சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு வென்டிலேட்டரைக் கொண்டு பலருக்கு சிகிச்சை அளிக்கும் தொழில்நுட்பத்தை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்த வகையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சிறுநீரக நோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஒரு வென்டிலேட்டரைக் கொண்டு பலருக்கு சிகிச்சை அளிக்கும் தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் விநீத் மிஷ்ரா கூறுகையில், பொதுவாக ஒரு வென்டிலேட்டரைக் கொண்டு ஒரு நோயாளிக்குத்தான் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இங்கு வென்டிலேட்டர் வசதி இல்லை. எனவே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே வென்டிலேட்டரில் பலருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...