மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பல்காரில் சிறுநீரகத்தைத் திருடி விற்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கருதி மூன்று பேரை அடித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 110 கிராமத்தினர் மீது வழக்குப் பதவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்களில் 101 பேர் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 9 பேர் சிறுவர்கள் என்பதால் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளனர்.
கட்சின்சலே கிராமத்தில் வியாழக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் காவல்துறையினரும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களாக அந்த கிராமத்தில், சிறுநீரகத்தைத் திருடி விற்கும் கும்பல் ஒன்று நடமாடுவதாக புரளி கிளம்பியது. இந்த நிலையில், கிராமத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியை கிராமத்தினர் தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே, பல்காரில் இருந்து நாஸிக் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரில் இருந்த மூன்று பேரை கிராமத்தினர் சிறுநீரகத்தை திருடி விற்பவர்கள் என்று கருதி அடித்துக் கொன்றுள்ளனர். கிராமத்தினர் தங்களை தாக்குவதாக காவல்துறைக்கு அவர்கள் அழைப்பு விடுத்ததை அடுத்து, தடுக்க வந்த காவலர்களையும் கிராமத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு முன்பு, கிராமத்தினரின் சமூக வலைத்தளப் பக்கங்களில் எந்த விதமான செய்திகள் பரவின என்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்தப் பகுதியில் இவ்வவாறு நடப்பது இது முதல் சம்பவம் அல்ல என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துலே என்ற பகுதியில் இதே போல சிறுநீரகத் திருடர்கள் என்று கருதி சிலரை இந்த கிராமத்தினர் அடித்துக் கொன்றச் சம்பவம் நடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7 பேரும் துரோகிகள்! விவசாயிகள் மரணத்திற்குக் காரணமான கட்சியில் இணைந்துள்ளனர்!

வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


