ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், கோவா ஆளுநராக வருகிற நவம்பர் 3-ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார்.
கோவா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக மிருதுலா சின்ஹா கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றார். அவருடைய பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மிருதுலா சின்ஹா வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற இருக்கிறார்.
மேலும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான சத்ய பால் மாலிக், கோவா ஆளுநராக வருகிற நவம்பர் 3-ஆம் தேதி பதவியேற்கிறார்.
மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிரதீப் நந்த்ராஜோக், ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சத்ய பால் மாலிக்கிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்று கோவா ராஜ் பவன் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் இதுகுறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட சமயத்தில் சத்யபால் மாலிக் ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


