நாடாளுமன்ற மக்களவையில், கோட்ஸே குறித்து பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் பேசியதற்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாகூர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.
இதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அவர், நாதுராம் கேட்சே ஒரு தேசபக்தர் என்று பேசினார். இதற்கு அவையிலே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவரை பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. இதையடுத்து அவர் குழுவில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, நேற்று பிரக்யா சிங் தாகூர் மக்களைவையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் ஆதரவாளர், அரசியல் ஆய்வாளர் மற்றும் சமூக ஆர்வலரான தெசீன் பூனாவாலா போராட்டம் நடத்தினார். பின்னர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி தில்லி போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
'பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் போராட்டம் நடத்தவில்லை; மிகவும் அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்தினேன், ஆனால், போலீசார் வலுக்கட்டாயமாக என்னை இழுத்துச் சென்றனர்' என்று தெசீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


