பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

ரேபரேலியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங், பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அங்கத் சிங் சைனியை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:10 pm

Muthumari

உத்தரப் பிரதேசம் ரேபரேலியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங், பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அங்கத் சிங் சைனியை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். 

ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளருமான அதிதி சிங்கிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. வருகிற நவம்பர் 21ம் தேதியன்று புதுதில்லியில் உள்ள ரிசார்ட்டில்  திருமணம் நடைபெற உள்ளது. கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிதியின் தந்தை அகிலேஷ் சிங் மரணமடைந்ததால் திருமண விழா குடும்ப அளவில் மட்டுமே நடைபெறுகிறது. 

Story image

இந்நிலையில், அதிதி மற்றும் அங்கத் இருவருமே முதல் முயற்சியிலே எம்.எல்.ஏக்களாக தேர்வாகினர். இருவரும் அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ரேபரேலி தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்வான மறைந்த அகிலேஷ் சிங்கின் மகள் அதிதி, அதேபோன்று பஞ்சாப் நவன்ஷஹர் தொகுதியில் இருந்து ஆறு முறை தேர்வான பிரகாஷ்  சிங்கின் மகன் அங்கத் சிங் சைனி ஆவார். 

அங்கத் ஒரு சீக்கியர் மற்றும் அதிதி ஒரு இந்து என்பதால், அவர்கள் இந்து மற்றும் சீக்கியம் ஆகிய இரு மத சடங்குகளின்படி திருமணம் நடைபெறவிருக்கிறது. 

இதையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் எம்.எல்.ஏக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.