லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் இதற்கு அக்கட்சியின் பிரசாரம் காரணம் அல்ல என்றும், 10 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற காங்கிரஸே காரணமாக இருந்தது என்றும் கூறுகிறது புள்ளி விவரங்கள்.
அதாவது, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இடம்பெற்ற மகாக் கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சி இணைந்திருந்தால் உத்தரப்பிரதேசத்தின் 10 தொகுதிகளை பாஜக கைப்பற்றியிருக்க முடியாது என்று தெரிகிறது.
அதாவது மகா கூட்டணி பெற்ற மொத்த வாக்குகள் 38.62%. காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்கு 6.3% இதை கூட்டினால் மொத்தம் 44.92% வாக்குகள். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெற்ற மொத்த வாக்குகள் 49.56%. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் படௌன், பண்டா, பஸ்தி, மீரட், சுல்தான்புர், பிரோஸாபாத் உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மகாக் கூட்டணி பெற்ற வாக்கு சதவீதத்தை விட பாஜக குறைவான வாக்கு சதவீதத்தையே பெற்றுள்ளது. ஒரு வேளை மகாக் கூட்டணியுடன் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டிருந்தால் இந்த 10 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அல்லது மகாக் கூட்டணியே வெற்றி பெற்றிருக்கும்.
இந்த 10 தொகுதிகளிலும் மகாக் கூட்டணி - காங்கிரஸ் இணையாததால் வாக்குகள் சிதறச் செய்த காரணத்தால் அது பாஜகவுக்கு பலமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


