ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு ரத்து செய்யும் போது அதில் அபராதத் தொகையை பிடித்தம் செய்யும் முறை கடந்த 2015ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
இதனால், ரயில் பயணிகளுக்கு கடுமையான பண நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஊருக்குப் போக டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு, திடிரென ஏதோ ஒரு காரணத்தால் அந்த டிக்கெட்டை ரத்து செய்யும் போத கால நேரத்துக்கு ஏற்ப ஒரு கட்டணத்தை ரயில்வே வசூலித்துக் கொள்கிறது.
அந்த வகையில், 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை வெறும் ரயில் டிக்கெட் ரத்து செய்யப்படும் போது பிடித்தம் செய்யும் தொகையால் ரயில்வே நிர்வாகத்துக்குக் கிடைத்திருக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா? ரூ.5,366.53 கோடியாகும்.
2017 - 18ம் நிதியாண்டில் இப்படிக் கிடைத்த வருவாய் ரூ.1,205.96 கோடியாக இருந்த நிலையில், 2018 - 19ம் நிதியாண்டில் ரூ.1,852.50 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது ஒரு டிக்கெட்டுக்கு ரூ.60ஐ ரயில்வே பிடித்தம் செய்கிறது. இதுவே ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு டிக்கெட்டை ரத்து செய்யும் போது ரூ.240 பிடித்தம் செய்யப்படும். இது நிச்சயம் ஒரு பெரிய தொகைதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


