பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பிரசாரத்தின் இறுதி நாளில்.. மோடி அரசின் ரிப்போர்ட் கார்டை வாசித்தார் அமித் ஷா

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். எனவே மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.

News image
Updated On :17 மே 2019, 11:25 am


புது தில்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். எனவே மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.

மக்களவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில், மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் சந்திப்பின் போது அமித் ஷா கூறியதாவது, பாஜகவின் நீண்ட மற்றும் வெற்றிகரமான தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். எனவே மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.  நாட்டுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் பாஜக பிரசாரம் மேற்கொண்டது.

ஏழைகள், விவசாயிகள், பெண்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் பாஜக அரசு கவனம் செலுத்தியது. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு 133 நலத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.  சுதந்திரத்துக்குப் பிறகு பாஜகவுக்கு இந்த தேர்தல்தான் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்று அமித் ஷா கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.