மும்பை: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய வழக்கில் பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய்க்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய். இவர் தன்னுடைய தொலைக்காட்சி பயணத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் இயக்கிய ‘ஸ்வாமிமான்' என்ற தொலைக்காட்சித் தொடரிலிருந்து தொடங்கினார். அத்துடன் ஃபேஷன் மாடலாகவும், இசைக்குழு ஒன்றில் பாடகராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில் இளம்பெண் ஒருவர் கரண் ஓபராய் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் காவல்துறையிடம் புகார் கூறினார். அத்துடன் அதை படம் பிடித்து வைத்துக் கொண்டு, பணம் கொடுத்தால் மட்டுமே விடியோவை கொடுப்பதாக கரண் மிரட்டியுள்ளார் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஓஷியார் பகுதி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்து, கரண் ஓபராயை மே 6-ஆம் தேதி கைது செய்தனர்.
அவர் மீது இந்திய குற்றவியல் பிரிவு 376 (பலாத்காரம்) மற்றும் 384 (பணம் பறிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அவர் 9-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய வழக்கில் கரண் ஓபராய்க்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் காவல் முடிந்த நிலையில் அவர் வியாழன் மதியம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அவர் சார்பாக வரும் வெள்ளியன்று அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று, அவரது வழக்கறிஞர் தினேஷ் திவாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


