பாட்னா: துரியோதனன் அல்ல; மோடி ஒரு காட்டுமிராண்டி என்று பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
ஹரியாணாவின் ஹிசார் நகரில் செவ்வாயன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி தனது பேச்சில், 'பேசுவதற்கு வேறு எந்தப் பிரச்சினையையும் கிடைக்கவிவ்ல்லை என்பதால் என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார்கள். இந்தியாவில் ஒருபோதும் அகங்காரத்திற்கு மன்னிப்பு என்பதே கிடையாது.
வரலாறு நமக்கு வழங்கும் ஆதாரமும் இதுதான், மகாபாரதத்தை நாம் ஆதாரமாக கொள்ளலாம். துரியோதனனிடமும் இருந்த அகங்காரம்தான் தற்போது பிரதமர் மோடியிடமும் உள்ளது. பகவான் கிருஷ்ணர் துரியோதனிடம் சமரசம் பேச முயற்சி செய்தபோது, அவன் கிருஷ்ணனை சிறைப்பிடிக்க முயற்சித்தான். அதுவே அவனது வீழ்ச்சிக்கு அடிகோலியது.' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் துரியோதனன் அல்ல; மோடி ஒரு காட்டுமிராண்டி என்று பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
புதன் கிழமையன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராப்ரி தேவி கலந்து கொண்டு பேசினார். அப்போதுஅவர் பேசியதாவது:
மோடியை துரியோதனன் என்று அழித்து பிரியங்கா தவறு செய்து விட்டார். அவர் மோடியை கொலைகாரர் என்றுதான் அழைத்திருக்க வேண்டும். அவர்தான் நீதிபதிகளை, பத்திரிகையாளர்களை கொல்லவும், கடத்தவும் காரணமாக அமைந்துள்ளார். இத்தகைய ஒரு மனிதன் காட்டுமிராண்டி மனநிலை கொண்டவராகத்தான் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


