சென்னை: மக்களவைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் 208 பொருட்களுக்கான விலைப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாங்கும் இந்த 208 பொருட்களுக்கான விலையும், தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் இருக்கும் விலையின் அடிப்படையில்தான் கணக்கெடுக்கப்படும்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் செலவிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் இந்த விலைப் பட்டியலில் உணவுப் பொருட்கள், வாடகைக்கு வாகனங்களுக்கான செலவு, தொழிலாளர்களை நியமிப்பது, மின்சாதனப் பொருட்களை பயன்படுத்துதல், பேனர்கள், போஸ்டர்கள், நாற்காலிகள், கொடிகள், பிளெக்ஸ் போர்டுகள் போன்ற அனைத்தும் இதில் இடம்பிடித்துள்ளது.
இதில், நட்சத்திர விடுதியில் வேட்பாளர் தங்கினால் அந்த அறைக்கான கட்டணத்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஐந்து நட்சத்திர விடுதியில் டபுள் பெட்ரூம் ஏசி அறைக்கு ரூ.9,300, மூன்று நட்சத்திர விடுதி என்றால் ரூ.5,800ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில பொருட்களின் விலை விவரங்கள் உங்களுக்காக..
மட்டன் பிரியாணி ரூ.200
சிக்கன் பிரியாணி - ரூ.180
சாப்பாடு ரூ.100
காலை உணவு ரூ.100
டீ ரூ.10
பால் ரூ.15
வெஜிடபிள் சாதம் ரூ.50
இளநீர் - ரூ.40 என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
இதில்லாமல், வேட்பாளர்களும், அவரது கட்சியினரும் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரங்கள் விடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வில்லியனூா் மாதா கோயிலில் திருட்டு

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் மரணம்

பைக் மீது காா் மோதி விபத்து: கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


