மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ரஃபேல் ஒப்பந்தத்தின் முதல் பலி மனோகர் பாரிக்கர்தான்: அதிர வைத்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ 

ரஃபேல் ஒப்பந்தத்தின் முதல் பலி மனோகர் பாரிக்கர்தான் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவான ஜிதேந்திர அவ்ஹாத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 மார்ச் 2019, 9:41 am

தானே: ரஃபேல் ஒப்பந்தத்தின் முதல் பலி மனோகர் பாரிக்கர்தான் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவான ஜிதேந்திர அவ்ஹாத் தெரிவித்துள்ளார்.

கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் கணைய அழற்ச்சி புற்று நோயின் காரணமாக ஞாயிறு இரவு மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது உடலானது திங்கள் மாலை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தற்போது பாஜக அரசுமீது வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டான ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தான போது, மத்தியில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் பாரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்தத்தின் முதல் பலி மனோகர் பாரிக்கர்தான் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவான ஜிதேந்திர அவ்ஹாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தானேவில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

மனோகர் பாரிக்கர் நன்கு படித்த சிந்தனைத் திறனுள்ள ஒரு நபர். ரபேல் ஒப்பந்தத்திற்குப் பிறகு தில்லியில் பதவியில் நீடித்திருப்பது சரியல்ல என்று அவர் எண்ணியிருப்பார் என்று நினைக்கிறேன். எனவேதான் அவர் கோவாவுக்குத் திரும்பியுள்ளார். அவர் மிகவும் சோகமாக உணர்ந்திருப்பார். அவர் தற்போது இல்லாத நிலையில் இதைக் கூறக் கூடாது; ஆனால் ரஃபேல் ஒப்பந்தத்தின் முதல் பலி மனோகர் பாரிக்கர்தான் என்று நான் எண்ணுகிறேன்.  

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து எல்லோரும் கடந்த ஒன்றரை வருடங்களாக பேசிக் கொண்டிருக்கிறாரகள். ஆனால் யாரும் பாரிக்கர் மீதுகுற்றம் சாட்டவில்லை. அதுவே அவரது நேர்மைக்கு, அவரை ஊழல் மயப்படுத்த இயலாது என்பதற்கு அத்தாட்சி. ஆனால் அங்கு நடைபெற்றுள்ள ஊழல் அவருக்கு மனக்காயத்தை உண்டாக்கியுள்ளது. அவரது நோயை எதிர்த்துப் போராட அவரை அது அனுமதிக்காமல் அவரைக் கொன்று விட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.